பாரதத்தின் தென்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக தங்களுக்கு கங்கை நதியைப் போல புனிதமான நதிவேண்டும் என்றும், அதன் உதவியால் நாடு செழித்து மக்கள் பஞ்சம் நீங்கி வாழ வேண்டும் என்றும் இறைவனைத் துதித்தனர். விநாயகப்பெருமானும் காவிரி என்னும் பெயரில் ஒரு பெரிய அழகான நதியை தென்னகத்துக்கு அளிக்கத் திருவுளம் கொண்டார். அதன்படி குறுமுனி அகத்தியர் தனது கமண்டலத்தில் புனித நீரை எடுத்துக் கொண்டு செல்ல, அவரைப் பின் தொடர்ந்தார் கணபதி. அகத்தியரும் ஓர் இடத்தில் கமண்டலத்தை வைத்து விட்டு நித்யகர்மாக்களை செய்யச் சென்ற போது காக்கை உருவம் எடுத்து, அந்தக் கமண்டலத்தை தட்டி விட்டு காவிரி என்ற பெயரில் பொன்னி நதி ஓட வகை செய்தார். அவரது அந்தச் செயலால் தமிழகம் முழுவதும் நீருக்கும் உணவுக்கும் கவலை இன்றி வாழும் நிலை உருவானது.