வேலூர்: விநாயகர் சதுர்த்தியையொட்டி, வேலூர் மாவட்டத்தில், 1,933 விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்து முன்னணி சார்பில், வேலூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியையொட்டி, 1,933 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு விநாயகர் சிலைக்கும் விழாக்குழு சார்பில், 20 பேர் கொண்ட குழு அமைத்து பாதுகாப்பு பணிகள் செய்து வருகின்றனர். ஏராளமான பக்தர்கள், பொது மக்கள் விநாயகரை வழிபட்டனர். வேலூர் தோட்டப்பாளையத்தில், 15 அடி உயர பாம்பே விநாயகர், கிருபானந்த வாரியார் சாலையில் உள்ள பாகுபலி விநாயகர் ஆகியவற்றை, பொது மக்கள் விரும்பி பார்த்தனர்.