பதிவு செய்த நாள்
06
செப்
2016
12:09
ஜலகண்டாபுரம்: ஜலகண்டாபுரம் அடுத்த, தோரமங்கலம், ஓங்காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம், வரும், 8ம் தேதி காலை, 11 மணிக்கு நடைபெற உள்ளது. அதையொட்டி, தீர்த்தக்குட ஊர்வலம் நேற்று நடந்தது. காலை, 7 மணிக்கு, 500க்கும் மேற்பட்ட பக்தர்கள், காவிரியில் இருந்து, புனிதநீரை குடங்களில் எடுத்துவந்தனர். 10 மணிக்கு, ஜலகண்டாபுரம் வலம்புரி செல்வ விநாயகர் ஆலயத்தில் இருந்து, மேளதாளங்களுடன் புறப்பட்ட தீர்த்தக்குட ஊர்வலம், 11 மணியளவில், ஓங்காளியம்மன் கோவிலை சென்றடைந்தது.