திருச்சி: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, நேற்று திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையாருக்கு பிரம்மாண்ட கொழுக்கட்டை படைல் செய்யப்பட்டது.
திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயிலில் நேற்று விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவில் உச்சிப்பிள்ளையாருக்கு 75 கிலோ எடையில் தயாரிக்கப்பட்ட கொழுக்கட்டை படையல் செய்து தீபாரதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.