ஒழையூர்: ஒழையூர் மோட்டூர் கிராமத்தில், வீரபத்ரகாளியம்மன் கோவிலில், ஆவணி திருவிழா கோலாகலமாக நடந்தது. காஞ்சிபுரம் அடுத்த, ஒழையூர் மோட்டூர் கிராமத்தில், வீரபத்ர காளியம்மன் கோவில் உள்ளது. நடப்பாண்டு, ஆவணி திருவிழா, 2ம் தேதி துவங்கியது. மூன்றாவது நாள் திருவிழாவை முன்னிட்டு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. சந்தன காப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.