வேலூர்: வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில், கணபதி ஹோமம் நடந்தது. வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில், கணபதி ஹோமம் நேற்று நடந்தது. இதில், ஒரு லட்சத்து, 32 ஆயிரம் கொழுக்கட்டைகள் செய்து, யாகத்தில் சேர்க்கப்பட்டது. இங்குள்ள மகா கணபதிக்கு சிறப்பு அபிஷேகமும், 23 வகையான இலைகளால் சிறப்பு அர்ச்சனையும் நடந்தது. தொடர்ந்து, முரளிதர சுவாமிகள் தலைமையில் வாஞ்ச கணபதி ஹோமம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.