பந்தலுார்: அன்னை தெரசாவுக்கு வாடிகனில், புனிதர் பட்டம் வழங்கியதையடுத்து, பந்தலுாரில் சிறப்பு பிரார்த்தனை நடத்தப்பட்டது. பந்தலுார் புனித சேவியர் தேவாலாயத்தில் அருட்தந்தை வில்சன் தலைமையில், அன்னை தெரசாவின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து, சிறப்பு பிரார்த்தனை நடத்தப்பட்டதுடன், அன்னை தெரிசாவின் சமூக பணிகள் குறித்து மக்கள் மத்தியில் பேசப்பட்டது. பிரார்த்தனையில் பங்கு மக்கள் பங்கேற்றனர்.