பதிவு செய்த நாள்
07
செப்
2016
12:09
ராமநாதபுரம்: மண்டபம் மீனவர் காலனி, காந்திநகர், இந்திரா நகர், மறவர் தெரு, சேது நகர், மண்டபம் முகாம் பூந்தோன்றி காளியம்மன் கோயில் உள்பட 13 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. இங்கு சிலைகளுக்கு இரு வேளை பூஜைகள் நடந்தன. நேற்று மதியம் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் சென்றது. மண்டபம் முகாம் சென்று திரும்பிய சிலைகள் தென் கடற்கரையில் கரைக்கப்பட்டன. ஏற்பாடுகளை பா.ஜ., நிர்வாகிகள் கோவிந்தராஜ், நம்புராஜன், ஞானகுரு, கண்ணன், பாண்டி, சரவணன், இந்து முன்னணி நிர்வாகி சங்கு முருகன் செய்தனர்.