திருவாரூர் மாவட்டம், திருக்காரவாசல் கைலாசநாயகி சமேத கண்ணாயிரநாத சுவாமி கோயிலில் மேற்கு பிராகாரத்தில் வீற்றிருக்கிறார் பிரமோத விநாயகர். பிரமோதம் என்றால் பெருமகிழ்ச்சி என்று பொருள். இத்தலத்திற்கு வருபவர்கள் பயம் நீங்கி, நோய்கள் தீர்ந்து பெருமகிழ்ச்சியோடு செல்வதால் இவருக்கு, இந்தப் பெயர் வந்தது. மேலும் இங்கு, பிரம்ம தீர்த்தத்தின் கரையில் கடுக்காய் விநாயகரும், கோபுர வாசலில் துவார விநாயகரும், பிராகாரத்தில் நர்த்தன விநாயகரும் அருள்பாலிக்கின்றனர்.