பதிவு செய்த நாள்
08
செப்
2016
11:09
பாலக்காடு: பாலக்காட்டில், செம்பை வைத்தியநாத பாகவதரின் 120வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு செப்.,10, 11ல் சங்கீத உற்சவம் நடக்கிறது. பாலக்காடு செம்பை பார்த்தசாரதி கோவில் வளாக கலையரங்கில் செப்.,10 காலை பெருவனம் குட்டன்மாரார் துவக்கி வைக்கிறார். ஸ்ரலயா தலைவர் கிருஷ்ணதாஸ், சங்கீத நாடக அகாடமி தலைவரும், நடிகையுமான லலிதா, செயலாளர் ராதாகிருஷ்ணன் பங்கேற்கின்றனர்.மதியம், சென்னை ஜெயராஜ் - கிருஷ்ணன்- ஜயஸ்ரீயின் வீணை கச்சேரி நடக்கிறது.செப்.,11ல் 31வது ஆண்டு மாநாட்டை அமைச்சர் பாலன் துவக்கி வைக்கிறார். மாவட்ட ஊராட்சி தலைவர் சாந்தகுமாரி, தொழிலதிபர் சித்திக் அகமது பங்கேற்கின்றனர்.மண்ணுார் ராஜகுமார உண்ணி, கோவை லதா வாசுதேவன், பெங்களூரு ஸ்ருதி சுனில், கண்ணுார் பாபு, கோழிக்கோடு காவியா பாஸ்கரன், நீலேஸ்வரம் கசியபன் நம்பூதரி, கோட்டயம் சிவபிரசாத், மதுரை பிரீதா சுப்ரமணியன், எர்ணாகுளம் ஸ்ரீலதா, ஆலப்புழை விஸ்வ நாதன், சேற்றுார் ஷைலா, ஸ்ரீலதா மேனன் உட்பட குழுவினரின் சங்கீத கச்சேரி நடக்கிறது.தலைவர் ஸ்ரீனிவாசன், செயலாளர் முருகன், துணை தலைவர் சுரேஷ் ஏற்பாடுகளை செய்துள்ளனர்.