மதுரை மீனாட்சி ஆவணி மூல திருவிழா: விறகு விற்ற சுந்தரேஸ்வரர்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13செப் 2016 11:09
மதுரை;மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், ஆவணி மூல திருவிழா கடந்த ஆக. 28ல் கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்றுவருகிறது. விழாவில், செப்., 10ல் நரியை பரியாக்கிய லீலை, செப்., 11ல், சிவபெருமான் புட்டுக்கு மண் சுமந்த லீலை நடைபெற்றது. விழாவின் 10௦ம் நாளான நேற்று, விறகு விற்ற லீலை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். செப்., 14ல் தீர்த்த உற்சவத்துடன் விழா நிறைவடைகிறது.