விருதுநகர்: விருதுநகர் சொக்கநாத சுவாமி கோயில் தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இக்கோயில் பிரம்மோற்சவ விழா செப்டம்பர் 4ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. விழா நாட்களில் பல்வேறு வாகனங்களில் சுவாமி, அம்மன் வீதிஉலா , மண்டபங்களில் சுவாமி எழுந்தருளி சிறப்பு வழிபாடு, செப்டம்பர் 11ல் திருக்கல்யாணம் நடந்தது. முக்கிய நிகழ்ச்சியாக நேற்று செப்பு சப்பரத்தில் சுவாமி, அம்மன் வலம் வர தேரோட்டம் நடந்தது. காலை 9.30 மணிக்கு புறப்பட்டு மாரியம்மன் கோயில், தெப்பம், மேலரத வீதி வழியாக கோயிலுக்கு 10.25 மணிக்கு நிலைக்கு வந்தது. நிர்வாக அதிகாரி நாராயணி, கோயில் இன்ஸ்பெக்டர் ஆவுடையம்மாள் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.