பழநி திருஆவினன்குடி கோயிலில் வருடாபிஷேக விழா: யாகபூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14செப் 2016 10:09
பழநி : முருகப்பெருமானின் மூன்றாம்படை வீடு என அழைக்கப்படும் பழநி திருஆவினன்குடி கோயிலில் வருடாபிஷேக விழாவை முன்னிட்டு 108 சங்குகள், கும்ப கலசங்கள் வைத்து சிறப்பு யாகபூஜை நடந்தது. மூலவர் குழந்தைவேலாயுதசுவாமிக்கு கும்பகலசநீர், சங்குஅபிஷேகம், பால், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட அபிஷேகங்கள் செய்து மகாதீபாராதனை நடந்தது. பைரவர், தட்ஷிணாமூர்த்தி, சனீஸ்வரர், மகாகணபதி உள்ளிட்ட உபசன்னதிகளில் சிறப்பு அலங்காரம் செய்து தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.