கோவை: இன்று ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. கேரள மக்களால் சாதி, மத வேறுபாடின்றி கொண்டாடப்படும் பண்டிகை ஓணம். கேரளாவின் ‘அறுவடைத் திருநாள் ’ என்றும் அழைப்பர். மலையாள ஆண்டின் சிங்கம் மாதத்தில் ஹஸ்த்தம் நட்சத்திரத்தில் துவங்கி, திருவோணம் நட்சத்திரம் வரை இருக்கும் பத்து நாட்கள் , ஓணமாக கொண்டாடப்படுகிறது. பத்தாவது நாளான இன்று, அத்தப்பூக்கோலமிட்டு, விமரிசையாக கொண்டாடுகின்றனர். இன்று கேரள மக்கள் புத்தாடை அணிந்து, ஒருவருக்கொருவர் பரிசுகள் அளித்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வர். ஒன்பது சுவைகளில் உணவு தயார் செ ய்யப்படும். கோவையில் வசிக்கும் மலையாள மொ ழி பே சும் மக்கள் , வீட்டு வா சல்களில், பூக்கோலமிட்டு மகா பலி மன்னனை வரவேற்கின்றனர். சித்தாபுதுார் ஐயப்பன் கோவிலில் ஓணத்தையொட்டி, இன்று சிறப்பு வழிபாடுகளும், சிறப்பு அன்னதானமும் நடைபெறுகிறது.