பதிவு செய்த நாள்
14
செப்
2016
11:09
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அடுத்த தும்பூர் தாங்கல் நாகம்மன் கோவிலில் சம்பஸ்ராபிஷேகம் நடந்தது. விக்கிரவாண்டி வட்டம், தும்பூர் தாங்கல் நாகம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்து, மூன்று ஆண்டுகள் நிறைவு பெறுவதையொட்டி, நேற்று காலை சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர், கடம் ஸ்தாபனம் செய்து, மகா சங்கல்பம் நடந்தது. கலசத்துடன் 108 சங்குகள் யாக பூஜையில் வைத்து, விசேஷ ேஹாமங்கள் நடந்தது. தொடர்ந்து, அம்மனுக்கு புனித நீர் ஊற்றி, சம்பஸ்ராபிஷேகம் நடந்தது. நாகம்மன் சந்தன காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். தும்பூர் அபிராம சர்மா தலைமையில், கிரிதர சர்மா, நாகராஜ குருக்கள் ஆகியோர் பூஜைகளை செய்தனர். ஏற்பாடுகளை அறநிலையத்துறை செயல்அலுவலர் முத்துலட்சுமி, ஆய்வாளர் செல்வராஜ், திருப்பணி குழு தலைவர் அப்பாசாமி, நிர்வாகிகள் சரவணா மெஸ் சந்திரசேகரன், ஷகிலா, முரளி, ராஜசேகர், விஜயகுமார், வேலாயுதம், சரவணன் உட்பட பலர் செய்திருந்தனர்.