கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி காமாட்சி அம்மன் கோவிலில் கும்பாபிஷேக நிறைவு விழா நடந்தது. கள்ளக்குறிச்சி கமலா நேரு தெருவில் உள்ள சித்தி விநாயகர், காமாட்சி அம்மன் கோவில், கும்பாபிஷேகம் முடிந்து, 7ம் ஆண்டு நிறைவு விழா நடந்தது. இதையொட்டி நேற்று முன்தினம் காலை காமாட்சி அம்மனுக்கு சம்பத்ஸ்ரா அபிஷேகமும், இரவு 7:00 மணிக்கு சந்தன காப்பு அலங்காரமும் நடந்தது. கோவிலில் ஏகாம்பரேஸ்வரர், விநாயகர், தட்சிணாமூர்த்தி, வள்ளி தெய்வாணை முருகன், நவக்கிரக சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. பூஜைகளை அம்பி குருக்கள் குழுவினர் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி வேலு மற்றும் விஸ்வகர்மா கைவினைஞர் சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.