புதுச்சேரி: விவேகானந்தா மேல்நிலைப் பள்ளி, வித்யா கணபதி கோவிலில் லட்சார்ச்சனை விழா நடந்தது. லாஸ்பேட்டை செல்லபெருமாள்பேட்டை விவேகானந்தா மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள வித்யா கணபதி கோவிலில், 16ம் ஆண்டு ஏகதின லட்சார்ச்சனை விழா, காலை 4:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. அதைத்தொடர்ந்து, 5:30 மணிக்கு மகா கணபதி ஹோமம், மூலமந்திர ஹோமம், காயத்திரி ஹோமம் நடந்தது. காலை 7:00 மணிக்கு மகா அபிஷேகம், தீபாராதனை நடந்தது. காலை 8:30 மணிக்கு லட்சார்ச்சனை துவங்கி, இரவு 7:00 மணிக்கு முடிந்தது.