மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் –-காரமடை ரோட்டில் அற்புத கெபி ஆரோக்கிய அன்னை சர்ச் தேர்த்திருவிழா கடந்த, 2ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் திருப்பலியும், நற்கருணை ஆராதனையும் நடந்தது. கோவை ஆயர் தாமஸ் அக்குவினாஸ் தலைமையில் ஆடம்பர கூட்டுப்பாடற்பலி நடந்தது. மாலையில் பாதிரியார் மரியஜோசப் தலைமையில் திருவிழா திருப்பலி நடந்தது. பாதிரியார் ஆனந்த் புனித நீர் தெளித்து தேரை ஆசீர் வதித்து, தேர்பவனியை துவக்கி வைத்தார். அலங்காரம் செய்த ஆரோக்கிய அன்னை தேர், கோவை மெயின் ரோட்டில் அஞ்சல் அலுவலகம் வரை சென்று மீண்டும் சர்ச்சை வந்தடைந்தது. ஊர்வலத்தில் பெண்கள், குழந்தைகள் உட்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.