கீழ்செவளாம்பாடி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14செப் 2016 05:09
அவலுார்பேட்டை: கீழ்செவளாம்பாடியில் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. மேல்மலையனுார் தாலுகா கீழ்செவளாம்பாடியில் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு 12 ம்தேதி அனுக்ஞை, எஜமான சங்கல்பம், விக்னேஸ்வர பூஜையும், 13 ம்தேதி கோ பூஜை, யாக சாலை, கும்ப அலங்காரமும், முதல் கால யாகசாலை பூஜையும் நடந்தது. இன்று இரண்டாம் கால யாக சாலை பூஜைகளுடன், மாரியம்மன் கோவில் விமானம் மற்றும் மூலவர் மகா கும்பாபிஷேகமும், தீபாரதனையும் நடந்தது. இதில் திரளாக கிராம மக்கள் கலந்து கொண்டனர்.