பதிவு செய்த நாள்
14
செப்
2016
06:09
கோவை: கணபதி, வேணுகோபால் சுவாமி கோவில், கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். வேணுகோபால் சுவாமி கோவில் சுமார், 1000 ஆண்டுகளுக்கு முன்பு, மைசூர் பேரரசால் கட்டப்பட்டது. தற்போது, இக்கோவில் விரிவுப்படுத்தப்பட்டு, கும்பாபிஷேக விழா ஏற்பாடு செய்யப்பட்டது. இதனை முன்னிட்டு கடந்த, 11ம் தேதியிலிருந்து விழா நடந்து வருகிறது. பாராயணம், சிறப்பு பூஜை, அபிஷேகம், பஜனை, முளைப்பாரி எடுத்தல் உள்ளிட்ட நிகழ்வுகள் தொடர்ந்து நடந்தன. காலை, 6:00 மணிக்கு கும்பங்கள் எழுந்தருளி, 6:30 –7:25 மணிக்குள் கலசாபிஷேகம் செய்யப்பட்டன. திருகோஷ்டியூர்– லட்சுமி நரசிம்மன் தலைமையில், 40 வேத வித்தகர்களால் நான்கு கால யாக பூஜை நடந்து, கலச தீர்த்தங்கள் பக்தர்களுக்கு வழங்கப்பட்டன. தொடர்ந்து, சந்தான கிருஷ்ணருக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேக பூஜை, திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடந்தது.