பதிவு செய்த நாள்
15
செப்
2016
11:09
பெண்ணாடம்: பெண்ணாடம் கிழக்கு வாள்பட்டறை அருகே உள்ள மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்தையொட்டி, கடந்த 12ம் தேதி காலை 9:00 மணிக்கு அனுக்ஞை, கணபதி பூஜை, கோ பூஜை, மாலை 5:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, முதல் கால யாகசாலை பூஜை, இரவு 8:20 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. நேற்று முன்தினம் காலை 10:45 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜை, மாலை 6:00 மணிக்கு மூன்றாம் கால யாகசாலை பூஜை நடந்தது. நேற்று (14ம் தேதி) காலை 7:00 மணியளவில் விக்னேஸ்வர பூஜை, 9:00 மணிக்கு தீபாராதனை, 9:15 மணிக்கு கடம் புறப்பாடாகி, 9:45 மணிக்கு மகா மாரியம்மன், மகா காளியம்மன், விநாயகர், முருகர், ஆஞ்சநேயர் கோவில் கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றி, கும்பாபிஷேகம் நடந்தது.