பதிவு செய்த நாள்
15
செப்
2016
11:09
திருப்பூர் : திருப்பூர் வட்டாரத்தில், மலையாளிகள், ஓணம் பண்டிகையை சிறப்பாக கொண்டாடினர். மலையாள மக்களின், முக்கிய பண்டிகையான ஓணம், நேற்று கொண்டாடப்பட்டது. திருப்பூரில் வாழும், மலையாளிகள், நேற்று ஓணம் பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தனர். புத்தாடை அணிந்தும், வீட்டு வாசலில் பூக்கோலமிட்டும், மகாபலி மன்னரை வரவேற்று, வண்ணப்பூக்களால், அத்தப்பூ கோலமிட்டனர். திருப்பூர், காலேஜ் ரோடு, ஐயப்பன் கோவிலில், அதிகாலை, சிறப்பு பூஜைகள் துவங்கின. கோவில் வளாகத்தில் பூக்களால் அத்தப்பூ கோலமிடப்பட்டிருந்தது. அவிநாசி, பல்லடம் வட்டாரத்திலும், மலையாளிகள், ஓணம் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர்.