பதிவு செய்த நாள்
15
செப்
2016
12:09
திருவள்ளூர்: திருவள்ளூர், வீரராகவர் கோவிலில், பவித்ர உற்சவம் நாளை துவங்குகிறது. திருவள்ளூர், வீரராகவர் கோவிலில் ஆண்டுதோறும் பவித்ர உற்சவம் நடைபெறுகிறது. தினசரி கோவிலில் நடைபெறும் நித்ய பூஜைகளில் குறைகள், தவறுகள் எதுவும் ஏற்பட்டால் அதை நிவர்த்தி செய்வதற்கு நடைபெறும் உற்சவமே பவித்ர உற்சவம். இந்த ஆண்டுக்கான பவித்ர உற்சவம், நாளை (16ம் தேதி) துவங்கி, வரும் 22ம் தேதி வரை, ஏழு நாட்கள் நடைபெறும். முதல் நாளான இன்று, பெருமாள் திருமஞ்சனம், காலை, 7:00 மணிக்கு நடக்கிறது. தினசரி காலை, 10:00 மற்றும் மாலை, 5:30 மணிக்கு, ஹோமம் நடக்கும். பவித்ர உற்சவத்தின் கடைசி நாளான, 22ம் தேதி ஹோமம், இரவு, 7:30 மணிக்கு துவங்கும். மகா பூர்ணாஹூதி, அன்று இரவு, 10:00 மணிக்கும், பெருமாள் திருமஞ்சனம் இரவு, 12:00 மணிக்கும் நடைபெற உள்ளது.