மதுராந்தகம்: மதுராந்தகம் வெங்காட்டீஸ்வரர் கோவில் கோபுரத்தில் செடிகள் முளைத்து, வளர்வதால் விரிசல் ஏற்படும் அபாயம் உள்ளது.மதுராந்தகம் ரயில் நிலையம் அருகில் உள்ளது, பழம்பெருமை வாய்ந்த வெங்காட்டீஸ்வரர் கோவில். இந்த கோவில் கோபுரம் பராமரிப்பில்லாமல் காணப்படுகிறது. கோபுரத்தில் ஆங்காங்கே செடிகள் முளைத்துள்ளன. இதனால், கோவில் கோபுரத்தில் விரிசல் ஏற்படும் அபாயம் உள்ளதாக பக்தர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.மேலும், சிவ, சிவ எனும் எழுத்துகளுக்கான விளக்கும் பழுதடைந்து உள்ளது. செடிகளை அகற்றி, மின் விளக்கு எழுத்துகளையும் சரி செய்ய வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.