பதிவு செய்த நாள்
16
செப்
2016
12:09
ஊத்துக்கோட்டை: சாய்பாபா சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு நடந்த சிறப்பு பூஜையில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
ஊத்துக்கோட்டையில், ஆனந்தவல்லி சமேத திருநீலகண்டேஸ்வரர் கோவிலில் பிரதோஷ விழா, சிவராத்திரி உள்ளிட்ட விழாக்கள் சிறப்பாக நடைபெறும். செவ்வாய், வியாழன், வெள்ளி ஆகிய கிழமைகளில், துர்க்கை, தட்சிணாமூர்த்தி, ஆனந்தவல்லி ஆகிய தெய்வங்களை தரிசிக்க, திரளான பக்தர்கள் இங்கு வருவர். இக்கோவில் வளாகத்தில், சாய்பாபா பக்தர்கள் சார்பில், ஷீரடி சாய்பாபா சிலை பிரதிஷ்டை விழா நடந்தது. இதையொட்டி கடந்த, 13ம் தேதி மாலை, 5:00 மணிக்கு கலச பூஜை, இரவு, 7:00 மணிக்கு, பாபா சிலை வைத்தல் நிகழ்ச்சி நடந்தது. மறுநாள், 14ம் தேதி காலை, 6:00 மணிக்கு, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், கோ பூஜை, பாபா ஹோமம், காலை, 9:00 மணிக்கு, பாபாவுக்கு கலச அபிஷேகம், அலங்காரம், அஷ்டோத்திரம், பிரசாத வினியோகம் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. மாலை, 6:00 மணிக்கு, ஆரத்தி, பஜனைகள் நடந்தன. நேற்று காலை, 7:00 மணிக்கு, பாலாபிஷேகமும், மாலை, 6:00 மணிக்கு, பஜனை சத்சங்கம், ஆரத்தி, ஆகியவையும் நடந்தன.