கிள்ளை எம்.ஜி.ஆர். நகர் முனீஸ்வரசுவாமி கோவிலில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16செப் 2016 04:09
கிள்ளை: கிள்ளை எம்.ஜி.ஆர். நகர் முனீஸ்வரசுவாமி கோவிலில் நடந்த கும்பாபிஷேகத்தில் சுற்றுப்பகுதியினர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
கிள்ளை எம்.ஜி.ஆர். நகர் முனீஸ்வரசுவாமி கோவிலில் எட்டாம் ஆண்டு வி ழாவும் புதியதாக கட்டப்பட்ட மண்டபம் மற்றும் முனீஸ்வரசுவாமி கோவி ல் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் மாலையில் இருந்து சிற ப்பு பூஜைகள் துவங்கியது. நேற்று 16 ம் தேதி காலையில் கோ பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகளுக்குப் பின் கடம் புறப்பாடு துவங்கியது. சிதம்பரம் சக்கரவர்த்தி சிவாச்சாரியர் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார். விழாவில் மாஜி., அமைச்சர் கலைமணி, பொறியாளர் அரவிந்தன், விவசாய சங்கத் தலைவர் ராஜாராமன், கிள்ளை வர்த்தக சங்கத் தலைவர் பாஸ்கர் உள் ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றுசுவாமி தரிசனம் செய்தனர்.விழா ஏற் பாடுகளை மாஜி மீனவர் நல வாரிய உறுப்பினர் சத்தியமூர்த்தி குடும்பத்தினர் செய்திருந்தனர். மாலையில் கிள்ளை காளியம்மன் கோவில் குளக்கரையில் இருந்து கரகம் புற ப்பட்டு கோவிலை சென்றடைந்தது. சுவாமிக்கு அபிஷேக ஆராத னை செய்து அன்னதானம் வழங்கினர். இரவு பட்டி மன்ற நிகழ்ச்சி நடந்தது.