பதிவு செய்த நாள்
19
செப்
2016
11:09
திண்டிவனம்: திண்டிவனம் அருகே உள்ள ஓமந்துார் ஸ்ரீராம் பள்ளியில், அகோபில மடத்தின் பீடாதிபதி ஸ்ரீரங்கநாத யதீந்திர மகா தேசி கள் பக்தர்களுக்கு ஆசி வழங்கினார். திண்டிவனம்–புதுச்சேரி ரோட்டிலுள்ள ஓமந்துார் ஸ்ரீராம் பள்ளியில், அகோபில மடத்தின் ௪௬வது பீடாதிபதி,ரங்கநாத யதீந்திர மகா தேசிகள், கடந்த ௧௭ம் தேதி மாலை விஜயம் செய்தார். சுவாமிகள் தொடர்ந்து வரும் ௨௬ம் தேதி வரை பள்ளியில் தங்கியிருந்து, பக்தர்களுக்கு அருளாசி வழங்க உள்ளார். நேற்று காலை 11.30 மணியளவில் பள்ளி வளாகத்தில் சுவாமிகள் தலைமையில் நடந்த சிறப்பு பூஜையில், பல்வேறு பகுதிகளிலிருந்து நுாற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று,சுவாமிகளிடம் ஆசி பெற்றனர்.
பள்ளி வளாகத்தில், வரும் ௨௨ம் தேதியிலிருந்து ௨௪ம் தேதி வரை ராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டை முன்னிட்டு, வேதகோஷம், பிரபந்த கோஷம் முழங்க, கடையநல்லுார் ஹரி பக்த பாராயண் துக்காராம் கணபதி மகாராஜ் தலைமையில் சிறப்பு பஜனை நடைபெறகின்றது. இதேபோல், வரும் ௨௩ம் தேதி சிறப்பு கோ பூஜை நடைபெற உள்ளது. தினந்தோறும் காலை 6 மணி, 11.30 மணி மற்றும் இரவு 8.30 மணிக்கு சிறப்பு பூஜைகள் நடக்கின்றது. பூஜைக்கான ஏற்பாடுகளை திருவந்திபுரம் அகோபில மடத்தின் சீனு ஐயர் செய்து வருகிறார். ஏற்பாடுகளை, தென்கோடிப்பாக்கம் பங்கஜம் அம்மாள், ஓய்வு பெற்ற வி.ஏ.ஓ., ராதாகிருஷ்ணன், ஸ்ரீராம் பள்ளி தாளாளர் முரளிரகுராமன், பஞ்சாயத்து தலைவர் மல்லிகா ஆகியார் செய்துள்ளனர்.