பதிவு செய்த நாள்
19
செப்
2016
12:09
பெத்தநாயக்கன்பாளையம்: பெத்தநாயக்கன்பாளையம், ஏத்தாப்பூர் சாம்பமூர்த்திஸ்வரர் கோவிலில், பெரம்பலூர் தந்தை ரோவர் வேளாண் கல்லூரி மாணவர்கள், நேற்று, உழவாரப்பணி மேற்கொண்டனர். அதில், கோவிலின் முகப்பு, உள்பிரகார கோபுரங்களில் முளைத்திருந்த, தேவையற்ற மரம், செடி, கொடிகளை அகற்றி, மாணவர்கள், களைக்கொல்லி மருந்து அடித்தனர். மேலும், கோவிலின் சுற்றுப்பகுதிகளில் உள்ள பார்த்தீனியம் செடிகள் மீது, களைக்கொல்லி மருந்து அடித்தனர். அதுமட்டுமின்றி, பார்த்தீனியம் ஒழிப்பு குறித்தும், பொதுமக்களிடம், மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அவர்களை, கல்லேரிப்பட்டி முன்னோடி விவசாயி கோவிந்தராஜ், பெத்தநாயக்கன்பாளையம் தோட்டக்கலை துறை உதவி அலுவலர் விஜயகுமார் மற்றும் பலர் பாராட்டினர்.