ஒரு ஆட்டுக்கிடை இருக்கிறது. அதற்குள் வாசல் வழியாய் பிரவேசிக்காமல், வேறுவழியாய் வருகிறவனை திருடன் என்றும், கொள்ளைக்காரன் என்றும் புரிந்து கொள்ளும் ஆடுகள், சத்தமிடுகின்றன. ஆனால், வாசல் வழியாய் பிரவேசிக்கிறவனை தங்கள் மேய்ப்பன் என நம்பி அவன் பின்னால் செல்கின்றன. அவன் சத்தத்துக்கு செவி கொடுக்கின்றன. இந்த ஆடுகளைப் போலவே மக்களாகிய ஆடுகளுக்கு மேய்ப்பராக இயேசு கிறிஸ்து உள்ளார். அவர் மக்களாகிய ஆடுகளை வழி நடத்துகிறார். நானே வாசல். என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால், அவன் ரட்சிக்கப்படுவான். நானே நல்ல மேய்ப்பன். நல்ல மேய்ப்பன் ஆடுகளுக்காக தன் ஜீவனைக் கொடுக்கிறான், என்கிறார். இயேசுகிறிஸ்து இதன் மூலம், எனதுபோதனைகளைக் கடைபிடியுங்கள். கடவுளிடம் விசுவாசமாக இருங்கள். ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துங்கள். நல்லதையே செய்யுங்கள், என்கிறார்.