கம்மாபுரம்: கம்மாபுரம் அடுத்த க.தொழூர் புத்துமாரி புஷ்ப கன்னியம்மன் கோவில் தீச்சட்டி உற்சவத்தில் அம்மன் வீதியுலா வந்து அருள்பாலித்தார். தீச்சட்டி உற்சவம் கடந்த 14ம் தேதி காப்புக் கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது.தினசரி, காலை 8:30 மணியளவில் அம்மனுக்கு அபிஷேக ஆராதனை, இரவு 7:00 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் வீதியுலா வந்து அருள்பாலித்தார்.கடந்த 17ம் தேதி காலை 8:00 மணியளவில் நடந்த தீச்சட்டி உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் தீச்சட்டி ஏந்திச் சென்று நேர்த்திக் கடன் செலுத்தினர். தொடர்ந்து, சொர்ண அபிஷேகம், அன்னப்படையல் நிகழ்ச்சி நடந்தன. மாலை 3:00 மணியளவில் கேரளா தையம் அம்மன் அலங்காரத்தில் வீதியுலா நடந்தது. அதில் விநாயகர், சிவன், பார்வதி, மாரியம்மன், காளி, தையம் அம்மன் வேடம் அணிந்து வந்தனர்.