பதிவு செய்த நாள்
22
செப்
2016
12:09
காரைக்குடி, காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிேஷகம் அக்.19-ல் நடக்கிறது. புதிதாக அமைக்கப்பட்டுள்ள கொடி மரத்துக்கு தங்க (ரேக்) தகடு பொருத்தும் பணி நேற்று நடந்தது. காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிேஷக திருப்பணி 2013 ஆகஸ்டில் ஸ்ரீலலிதா முத்துமாரியம்மன் அறக்கட்டளை சார்பில் தொடங்கப்பட்டது. 77 அடி அகலம் 144 அடி நீளம், 18.5 அடி உயரம் கொண்ட பிரகார மண்டபம், 23 அடி உயர கொடி மரம், 52 அடி ராஜகோபுரம், 600 பேர் அமர்ந்து சாப்பிடும் அன்னதான மண்டபம், மூலஸ்தான விமானம் திருப்பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. கொடிமரத்துக்கு தங்க (ரேக்) தகடு பொருத்தும் பணி நேற்று பிள்ளையார்பட்டி பிச்சை குருக்கள் தலைமையில் தொடங்கியது. ஏற்பாடுகளை துணை ஆணையர் ரோஜாலி சுமதா, செயல் அலுவலர் அகிலாண்டேஸ்வர், நகை மதிப்பீட்டு வல்லுனர் தர்மராஜ், கணக்கர் அழகு பாண்டி செய்திருந்தனர். செயல் அலுவலர் கூறும்போது: ஸ்ரீ லலிதா முத்துமாரியம்மன் அறக்கட்டளை மூலம் மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் திருப்பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. ராஜகோபுரம், மூலஸ்தான விமானம் கும்பாபிேஷகம் வரும் அக்.19-ம் தேதி நடைபெற உள்ளது. 17-ம் தேதி மாலை முதற்கால யாகசாலை பூஜையுடன் கும்பாபிேஷக பணிகள் தொடங்குகிறது. 18-ம் தேதி 2,3-ம் கால யாகசாலை பூஜை, 19-ம் தேதி நான்காம் கால யாக சாலை பூஜை, காலை 10 மணிக்கு விமானம் மற்றும் ராஜகோபுரம், மூலஸ்தான விமானம் கும்பாபிேஷகம் நடக்கிறது. நிகழ்ச்சியில் லலிதா முத்துமாரியம்மன் அறக்கட்டளை உறுப்பினர்கள் பங்கேற்றனர்.