பதிவு செய்த நாள்
24
செப்
2016
12:09
சென்னை: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பகுதிகளில் உள்ள, கோவில்களின் திருப்பணி நிதி உதவியை, 50 ஆயிரத்தில் இருந்து, ஒரு லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்க, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டு உள்ளார். அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையில் கூறியபடி, கிராமப்புறத்திலும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வாழும் பகுதிகளிலும் உள்ள, கோவில்களின் திருப்பணிக்கான உதவித்தொகையை, 50 ஆயிரத்தில் இருந்து, ஒரு லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்க, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டு உள்ளார். இதற்கு, நிதி வசதி மிகுந்த, பிற கோவில்களின் உபரி நிதியை பயன்படுத்த, அறநிலையத் துறை ஆணையருக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. மேலும், ஆதிதிராவிடர், பழங்குடியினர் பகுதிகளில் உள்ள, அறநிலையத் துறையின் கீழ் வராத கோவில்களின் திருப்பணி, சீரமைப்புக்காக வழங்கப்படும் நிதி உதவியும், ஒரு லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது.