பதிவு செய்த நாள்
24
செப்
2016
12:09
உடுமலை: ஏழுமலையான் கோவில் புரட்டாசி திருவிழாவில், இரண்டாவது சனிக்கிழமையான இன்று சிறப்பு பூஜை நடக்கிறது. மூணார் ரோட்டில் உடுமலை வனச்சரகத்தில் உள்ளது ஏழுமலையான் கோவில். இக்கோவிலில் ஆண்டு தோறும் புரட்டாசி விழா நடந்து வருகிறது. அம்மாதத்தில் சனிக்கிழமைகளில் கோவிலில் சிறப்பு பூஜைகள், ஆராதனைகள், வழிபாடுகள் நடைபெறும். விழாவில், உடுமலை, பொள்ளாச்சி மற்றும் கோவை, திருப்பூர் மாவட்டங்களிலிருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபடுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான இத்திருவிழா கடந்த, 17ம் தேதி துவங்கியது. புரட்டாசி மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமையான இன்று காலை முதல் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. தொடர்ந்து விஸ்வரூப தரிசனம், அபிேஷகம், அலங்காரம் நடைபெறுகிறது. பக்தர்கள், நேற்றுமுன்தினம் நள்ளிரவு முதல் வரத்துவங்கினர். புரட்டாசி திருவிழாவையொட்டி உடுமலை அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இன்று இயக்கப்படுகின்றன. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர்கள், இந்து சமய அறநிலையத்துறையினர், வனத்துறையினர் செய்துள்ளனர். -நமது நிருபர்-