Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மாலை அணியும் முறை! ஐஸ்வர்யம் கிட்டும்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
ஏழ்பிறப்பும் இணைந்திருக்கும் சொந்தம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 செப்
2016
02:09

*கணவன், மனைவி உறவுக்கு இணையாக உலகில் வேறெந்த உறவையும் சொல்ல முடியாது. எந்த விஷயத்தையும், பிரச்னையையும் நாசூக்காக கையாளுங்கள். விட்டுக் கொடுத்து வாழுங்கள். சில நேரங்களில் சில சங்கடங்களை சகித்துத் தான் ஆக வேண்டும் என்று உணருங்கள்.
*கணவனுக்குத் தெரியாமல் மனைவியோ, மனைவிக்குத் தெரியாமல் கணவனோ சம்பாதிப்பதும், சேமிப்பதும் கருத்து வேறுபாடுக்கு இடம் தரும்.
*நானே பெரியவன் என்ற அகந்தையை விடுங்கள். அர்த்தமில்லாமலும், பின்விளைவு அறியாமலும் பேசிக் கொண்டே இருப்பதை விடுங்கள்.
*குடும்பத்தை நிர்வாகம் செய்வது உங்கள் அறிவாகத் தான் இருக்க வேண்டும். எந்நிலையிலும் உணர்ச்சிகள் நிர்வாகம் செய்யக் கூடாது.
*நீங்கள் சொன்னதே சரி, செய்ததே சரி என்று வாதாடாதீர்கள். குறுகிய மனப்பான்மையை விட்டொழியுங்கள்.
*உண்மை எது, பொய் எது என்று விசாரிக்காமல் இங்கே கேட்டதை அங்கே சொல்வதையும், அங்கே கேட்டதை இங்கே சொல்வதையும் விடுங்கள்.
*மற்றவர்களை விட உங்களையே எப்போதும் உயர்த்தி நினைத்து கர்வப்படாதீர்கள். அளவுக்கு அதிகமாய், தேவைக்கு அதிகமாய் ஆசைப்படாதீர்கள்.
*எல்லோரிடத்திலும் எல்லா விஷயங்களையும், அவர்களுக்கு சம்பந்தம் உண்டோ, இல்லையோ சொல்லிக் கொண்டிருக்காதீர்கள்.
*கேள்விப்படும் எல்லா விஷயத்தையும் நம்பாதீர்கள். அற்ப விஷயங்களைப் பெரிதுபடுத்தாதீர்கள்.
*உங்கள் கருத்தில் உடும்புப்பிடியாய் இல்லாமல், கொஞ்சம் தளர்த்திக் கொள்ளுங்கள். மற்றவர் கருத்துக்களையும் ஏற்றுக்கொள்ள பழகுங்கள்.
*மற்றவர்களுக்கு மரியாதை காட்டவும், இனிய, இதமான சொற்களைப் பயன்படுத்தவும் தவறாதீர்கள். புன்முறுவல் காட்டவும், அன்புச் சொற்களைப் பேசவும் கற்றுக் கொள்ளுங்கள்.
*பேச்சிலும், நடத்தையிலும் பண்பில்லாத வார்த்தைகளையும், தேவையில்லாத மிடுக்கையும் காட்டுவதைத் தவிர்த்து அடக்கத்தையும், பண்பையும் காட்டுங்கள்.
*அவ்வப்போது நேரில் சந்தித்து மனம் திறந்து பேசுங்கள். பிரச்னை ஏற்படும் போது அடுத்தவர் முதலில் இறங்கி வர வேண்டும் என்று காத்திருக்காமல் நீங்களே பேச்சைத் துவங்க முன் வாருங்கள்.
*குடும்ப அமைதியே உலக அமைதிக்கு வித்தாகும். வீண் செலவுகளே குடும்ப அமைதியைக் கெடுக்கும். குடும்பத்தில் அமைதி நிலவ சகிப்புத் தன்மை, விட்டுக் கொடுத்தல், தியாகம் ஆகியவற்றைக் கடைபிடியுங்கள்.
*குடும்பத்தில் அனைவரும் அல்லது பெரும்பாலோர் பொருளீட்டும் திறன் பெற்றிருத்தல் வேண்டும்.
*பிறர் குற்றத்தை பெரிதுபடுத்தாமலும், பொறுத்தலும், மறத்தலும் அமைதிக்கு வழிவகுக்கும்.
*தனக்கு கிடைத்த வாழ்க்கைத் துணையைப் பற்றி யாரும் குறை கொள்ளத் தேவையில்லை. அவரவர் அடிமனம் தான் அதை தேர்ந்தெடுத்தது.
*மனத்துõய்மை, சுத்தமான உணவு, அளவான உழைப்பு, முறையான ஓய்வு இவற்றுடன் கூடியதாக வாழ்க்கையை அமைத்துக் கொண்டால் உடல், மனம் இரண்டிலும் புத்துணர்ச்சி எப்போதும் நிறைந்திருக்கும்.
*உண்மையில் மனிதனுக்கு எதிரி உண்டு என்றால் அது மனதில் எழும் ஒழுங்கற்ற எண்ணமே. உண்ணும் உணவு உடலில் மட்டுமே வேலை செய்கிறது. ஆனால் எண்ணும் எண்ணமோ எங்கும் பாயும் ஆற்றல் கொண்டது. (மகான் வேதாத்ரி மகரிஷி)

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
மிக அழகானது - பழநி பெரிய ஆவுடையார் கோயில்தலை சாய்த்த கோலம் - திருவூறல், தக்கோலம் (வேலூர் மாவட்டம்)சிற்ப ... மேலும்
 
அரிதாக சில கோயில்களில் கால்களை மாற்றி மடக்கி வைத்தும், குத்துக்காலிட்ட நிலையிலும் காட்சி தரும் ... மேலும்
 
வலதுகை ஆட்காட்டி விரலின் நுனியும், கட்டைவிரலின் நுனியும் பொருந்தியிருக்க, நடுவிரல், மோதிரவிரல், ... மேலும்
 
தெட்சிணாமூர்த்தி யோகம், ஞானம் (மேதா), வீணா, வியாக்யான தெட்சிணாமூர்த்தி என நான்கு நிலைகளில் ... மேலும்
 
கலக்கத்தில் இருப்பவர்களுக்கு பலத்தைக் கொடுப்பவர் ராமர். அவரது திருவடியில் சரணடைந்த பக்தர்களைக் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar