‘‘இப்போது நீங்கள் கூறினீர்களே. அதுதான் தக்வா. அதாவது இறையச்சம்’’ என்றார்.
மனித வாழ்க்கை ஒரு பயணம். அதற்கு ஒரு பாதை இருக்கிறது. மனிதன் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் அது வழியாகத்தான் சென்றாக வேண்டும். அப்படி செல்லும்போது பயம், கவலை, நோய் போன்ற பாதிப்பு வரக் கூடும். அவற்றில் இருந்து கவனமுடன் காத்துக் கொள்ள வேண்டும். இதற்கு இறையச்சம் துணை செய்யும்.