திருப்பாச்சூர் : திருப்பாச்சூரில் உள்ள லலிதாம்பிகை கோவிலில், நாளை, நவராத்திரி விழா துவங்கி, ஒன்பது நாட்கள் நடைபெற உள்ளது. திருவள்ளூர் அடுத்த, திருப்பாச்சூரில் அமைந்துள்ளது காமேஸ்வரர் உடனாய லலிதா மகாதிரிபுரசுந்தரி கோவில். இங்கு, இந்த ஆண்டு நவராத்திரி திருவிழா, நாளை துவங்கி, ஒன்பது நாட்கள் தொடர்ந்து நடைபெற உள்ளது. நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு, தினமும் காலை, 9:00 மணி முதல், 11:30 மணி வரை, சண்டிமூலமந்தர யாகம் நடைபெறும்.