பதிவு செய்த நாள்
05
அக்
2016
12:10
ஊட்டி: ஊட்டி ஜெயின் கோவிலில், சாத்வி சுயம் பூர்ண சுவாமியின், பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, மகாவீர் ஜெயின் அமைப்பின் மூலம், சிறப்பு அன்னதான விழா நடந்தது. இதனை, பூனம் கோத்தாரி துவக்கி வைத்து பேசுகையில்,“ஒவ்வொரு மாதத்தின் இரண்டாம் வாரத்தில், ஆன்மிக சொற்பொழிவுடன், எங்கள் கோவிலில் அன்னதானம் நடக்கிறது. இதில், உள்ளூர் மக்கள் அனைவரும் பங்கேற்கலாம்,” என்றார். பின்பு,நிகழ்ச்சி துவங்கியது. இதில், ஜெயின் மத துறவிகள், திரளான மக்கள் பங்கேற்றனர்.