கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரம் அடுத்த மடவிளாகம் காலனி பகுதியில் உள்ள திருவேங்கடப் பெருமாள் கோவிலில் வரும் 10ம் தேதி தேர் திருவிழா நடக்கிறது. விழாவையொட்டி, காலை 9:00 மணியளவில் ஸ்ரீதேவி, பூதேவி மற்றும் மூலவர் திருவேங்கடப் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. பின்னர், காலை 9:15 மணியளவில் கொடியேற்றம் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை தர்மகர்த்தா ராமலிங்கம் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர். வரும் 10ம் தேதி, காலை திருவோண நட்சத்திரத்தில் திருத்தேர் திருவிழா நடக்கிறது.