பதிவு செய்த நாள்
08
அக்
2016
12:10
பொங்கலூர்: பொங்கலூர் கோவில்பாளையம் ராமசாமி கோவிலில், ஆண்டு தோறும் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில், பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். கோவிலில், இட நெருக்கடி காரணமாக கூட்டம் நிரம்பி வழிகிறது. இங்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கைக்கேற்ப அடிப்படை வசதிகள் போதவில்லை என்பது பக்தர்களின் மனக்குமுறலாக உள்ளது. பலர் வெளியூர்களில் இருந்து வருவதால், குடிக்க தண்ணீர் வசதி இல்லை; கழிப்பறை வசதியும் கிடையாது.இதனால், கோவிலுக்கு வரும் பக்தர்கள் பெரும் இன்னலுக்கு உள்ளாகின்றனர். கோவில்அறங்காவலர் குழு தலைவர் கிருஷ்ணகுமார் கூறுகையில், ""கோவிலுக்குச் சொந்தமான இடம், 50 சென்ட் மட்டுமே உள்ளது. இதில், கோவில் பிரகாரமே, 40 சென்ட் போய் விடுகிறது. இதில், மேற்கொண்டும் கழிப்பிட வசதி செய்ய இட வசதி இல்லை. பட்டா நிலத்தில், எந்த கட்டுமானமும் செய்ய முடியாது. வசதிகளை செய்ய, ஊராட்சி நிர்வாகத்திடம் வலியுறுத்தி உள்ளோம், என்றார்.