பதிவு செய்த நாள்
08
அக்
2016
12:10
கரூர்: தான்தோணிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலில், புரட்டாசி தேர்த்திருவிழா, அக்., 11ம் தேதி நடக்கிறது. கரூர், தான்தோணிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலில், ஆண்டுதோறும் புரட்டாசி திருவிழா வெகுவிமரிசையாக நடக்கிறது. நடப்பாண்டு, செப்., 3ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. புரட்டாசி சனிக்கிழயைன்றும் சிறப்பு பூஜைகள் நடக்கிறது. விசேஷ நாட்களான ஐந்தாம் சனிக்கிழமைகளிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு செய்வர். இதனால் காலை, 6:00 மணி முதல் பிற்பகல், 1:00 மணி வரையும், மாலை, 4:00 மணி முதல், இரவு, 8:00 மணி வரையும் கோவில் நடை திறந்திருக்கும். வரும், 11ம் தேதி தேர்த்திருவிழா நடக்கிறது. இவ்விழால், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்க உள்ளதால், பாதுகாப்பு ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.