பதிவு செய்த நாள்
11
அக்
2016
11:10
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், ஆயுத பூஜையை முன்னிட்டு, பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. நேற்று நடந்த நவராத்திரி விழாவில், சரஸ்வதி அம்மன், சந்தன காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதை முன்னிட்டு, அருணாசலேஸ்வரர் மற்றும் உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடந்தது. ஆயுத பூஜையை முன்னிட்டு, ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்தனர். விடுமுறை நாள் என்பதால், ஆந்திரா, கேரளா, கர்நாடக மாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்ததால், காலை முதலே கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.