திருவாடானை: திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் சிநேகவல்லிதாயார் சன்னதியில் நவராத்திரி விழா நடந்து வருகிறது. இவ்விழாவை யொட்டி நேற்று லட்சார்ச்சனை நடந்தது. சிவாச்சாரியர்கள் வேதமந்திரங்கள் முழங்க சிறப்பு பூஜைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.