பதிவு செய்த நாள்
12
அக்
2016
12:10
காரைக்குடி : காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேக திருப்பணி 2013 ஆகஸ்டில் ஸ்ரீலலிதா முத்துமாரியம்மன் அறக்கட்டளை சார்பில் தொடங்கப்பட்டது.
77 அடி அகலம் 144 அடி நீளம், 18.5 அடி உயரம் கொண்ட பிரகார மண்டபம், 23 அடி உயர கொடி மரம், 52 அடி ராஜகோபுரம், 600 பேர் அமர்ந்து சாப்பிடும் அன்னதான மண்டபம், மூலஸ்தான விமான பணிகள், கொடிமரத்துக்கு தங்க ரேக் பொருத்தும் பணி, கதவுகளுக்கு வெள்ளி தகடு பொருத்தும் பணி நிறைவடைந்துள்ளது. அக்.19ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு தற்போது யாகசாலை அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளது.
செயல் அலுவலர் அகிலாண்டேஸ்வரர் கூறும்போது: காரைக்குடி முத்துமாரியம்மன் கோயில் திருப்பணிகள் லலித முத்துமாரியம்மன் அறக்கட்டளை சார்பில் ரூ.2.8 கோடியில் நடந்துள்ளது. அனைத்து பணிகளும் முடிவடைந்துள்ளன. வருகிற 14ம் தேதி மாலை 6 மணிக்கு கணபதி ேஹாமத்துடன் கும்பாபிஷேக பணிகள் தொடங்குகிறது. முதற்கால யாகசாலை பூஜை 17ம் தேதி மாலை 6.30 மணிக்கு நடக்கிறது. 19ம் தேதி நான்காம் கால யாக சாலை பூஜை, காலை 10 மணிக்கு விமானம் மற்றும் ராஜகோபுரம், மூலஸ்தான விமானம் கும்பாபிஷேகம் நடக்கிறது. போக்குவரத்து கழகம் சார்பில் காரைக்குடியின் சுற்று வட்டார பகுதிகள், சிவகங்கை, அறந்தாங்கி பகுதியிலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. மூன்று நாட்களிலும் சுமார் ஒரு லட்சம் பேருக்கு அன்னதானம் மு.வி., பள்ளி மைதானத்தில் வழங்கப்பட உள்ளது, என்றார். ஏற்பாடுகளை உதவி ஆணையர் ராமசாமி தலைமையில், செயல் அலுவலர், ஊழியர்கள், அறக்கட்டளையினர் செய்து வருகின்றனர்.