காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில், சரஸ்வதி அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார்.
சின்ன காஞ்சிபுரம், வரதராஜபுரம் தெருவில் அமைந்துள்ளது வரசக்தி விநாயகர் மற்றும் ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவில். இக்கோவிலில், நவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி, ஒன்பது நாட்களும், அம்மன் பல்வேறு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஆயுத பூஜையான நேற்று முன்தினம் இரவு, சரஸ்வதி அலங்காரத்தில் உற்சவர் காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர்.