பதிவு செய்த நாள்
13
அக்
2016
11:10
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் விஜயதசமி விழாவை முன்னிட்டு அம்பு விடும் நிகழ்ச்சி கோலாகலமாக நடந்தது. ராமநாதபுரம் ராஜராஜேஸ்வரி அம்மன் கோயில் நவராத்திரி விழா செப்., 30ல் துவங்கியது. இதைமுன்னிட்டு பல்வேறு அலங்காரங்களில் பக்தர்களுக்கு அம்மன் அருள்பாலித்தார். 11ம் நாளான அக்., 11 இரவு 7:30 மணிக்கு தங்க சிம்ம வாகனத்தில் எழுந்தருளிய அம்மன் மகிஷாசுரமர்த்தினி கோலத்தில் புறப்பாடாகி மகர்நோன்பு திடலுக்கு வந்தடைந்தார். அங்கு வனசங்கரி, உதிரகாளி, கோதண்டராமர், கோட்டை வாசல் விநாயகர், கன்னிகா பரமேஸ்வரி, பாலசுப்ரமணிய சுவாமி, சுவாமிநாத சுவாமி, ராஜமாரியம்மன், சவுபாக்யநாயகி ரெத்தினேஸ்வரர், காளிகா தேவி, மல்லம்மாள், பிள்ளைகாளி, வெட்டுடையாள் காளி, வெளிபட்டணம் மாரியம்மன், காட்டுப்பிள்ளையார்கோவில் ஐயப்பன் உள்பட 20க்கும் மேற்பட்ட கோயில்களில் இருந்து சுவாமி விக்ரகங்கள் புறப்பாடானது. இரவு 11:30 மணிக்கு அம்பு விடும் நிகழ்ச்சி நடந்தது. இதையடுத்து வாண வேடிக்கை நடந்தது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள், விழாக்குழுவினர், இளைஞர், மகளிர் மன்ற நிர்வாகிகள் செய்திருந்தனர்.
* ராமேஸ்வரம் என்.எஸ்.கே.வீதியில் உள்ள முனியசாமி கோயிலில் விஜயதசமி விழாவையொட்டி பக்தர்கள் அக்னிதீர்த்த கடலில் நீராடிவிட்டு பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் நிறைவு செய்தனர். உச்சிப்புளி அருகே பத்திரகாளியம்மன் கோயிலில் நடந்த விழாவில் பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக்கடன் நிறைவு செய்தனர்.