காரைக்குடி, காரைக்குடி கொப்புடையம்மன் கோயிலில் நவராத்திரி விழா கடந்த 1-ம் தேதி தொடங்கியது. நவராத்திரி நாட்களில் அம்மாள் ராஜராஜேஸ்வரி, சரஸ்வதி, பிட்டுக்கு மண் சுமந்த அலங்காரம், உட்பட பல்வேறு அலங்காரங்களில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் கடைசி நாளான நேற்று முன்தினம் அம்பாள் பாரி வேட்டைக்கு செல்லும் நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக அம்பாளுக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. இரவு 8:00 மணியளவில், அம்பாள் வில் அம்புடன் குதிரை வாகனத்தில் எழுந்தருளி ஊர்வலமாக புறப்பட்டு மகர்நோன்பு பொட்டலை வந்தடைந்தார். இரவு அம்பு எய்தல் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.