பதிவு செய்த நாள்
15
அக்
2016
11:10
விழுப்புரம்: விழுப்புரம் வடக்கு மாவட்ட அ.தி.மு.க., மருத்துவரணி சார்பில், முதல்வர் ஜெ., பூரண குணமடைய வேண்டி, சிறப்பு பூஜை நடந்தது. விழுப்புரம் ஸ்ரீகைலாசநாதர் கோவிலில் நடந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட மருத்துவரணி தலைவர் டாக்டர் கலைச்செல் வம் தலைமை தாங்கினார். இதில், சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், மகா தீபாரதனை நடந்தது. இதில், மாவட்ட மருத்துவரணி துணை தலைவர் தம்பிதுரை, துணை செயலாளர் செந்தில், நகர கூட்டுறவு வங்கி இயக்குனர்கள் தனுசு, சம்பத், கமரூதின், மல்லிகா, ராதிகா செந்தில், நகர மன்ற உறுப்பினர் அபிராமன், மகளிர் தையல் சங்க இயக்குனர் ரமணிசந்திரன், மகளிரணி ஈஸ்வரி மற்றும் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.