பதிவு செய்த நாள்
15
அக்
2016
11:10
கிருஷ்ணகிரி: பர்கூர் அருகே உள்ள, ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவிலில், 40ம் ஆண்டு கருட உற்சவம் மற்றும் திருமண வைபோக திருவிழா நடந்தது. கிருஷ்ணகிரி அடுத்த, பர்கூர் அருகே உள்ள குமரங்கனப்பள்ளி போடிமலையில், ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவில் உள்ளது. கோவிலில், 40ம் ஆண்டு கருட உற்சவம் மற்றும் சுவாமிக்கு திருமண வைபோக திருவிழா நடந்தது. விழாவையொட்டி கடந்த, 13 ம் தேதி காலை, விநாயகர், ஆஞ்சநேயர், வெங்கடேச பெருமாள், ஓம்சக்தி ஆகிய தெய்வங்களுக்கு சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகம், ஹோமம் நடந்தது. தொடர்ந்து கருட உற்சவ திருவிழா நடந்தது. விழாவின் இரண்டாம் நாளான நேற்று காலை விநாயகர், ஆஞ்சநேயர், பெருமாள் சுவாமிக்கு அபிஷேக ஆராதனை நடந்தது. பின்னர், வெங்கடேச பெருமாள், ஸ்ரீ தேவி, பூதேவி திருமண வைபோகம் நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.