வாடிப்பட்டி: வாடிப்பட்டி அருகே நீரேத்தான் மேட்டுநீரேத்தான் ஆதிஅய்யனார், சோனைசுவாமி திருக்கோயில் புரட்டாசி திருவிழா நடந்தது. விழாவையொட்டி அய்யனார்கோவிலில் அய்யனாருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள், அர்ச்சனைகள் நடந்தது. இதில் அய்யனாருக்கு சந்தனகாப்பு, வெளிக்கவச அலங்காரம், ராஜஅலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பெட்டி எடுப்பு மற்றும் முளைப்பாரி எடுப்புநிகழ்ச்சியும் நடந்தது. இதன் ஏற்பாடுகளை நீரேத்தான்-மேட்டு நீரேத்தான் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.