பதிவு செய்த நாள்
17
அக்
2016
12:10
சேலம்: செவ்வாய்ப்பேட்டை, ரவுத்து நாயுடு இளைஞர் முன்னேற்ற சங்கத்தினர் நடத்திய, திருக்கல்யாண உற்சவத்தில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர். சேலம், செவ்வாய்ப்பேட்டை, கன்னாரத்தெருவில், ஆகானப்பட்டு தெலுங்கு விஸ்வ பிராமண மண்டபத்தில், ஸ்ரீதேவி, பூதேவி, சமேத லட்சுமி நாராயண பெருமாள் திருக்கல்யாண உற்சவத்தை முன்னிட்டு, நேற்று காலை, ஆஞ்சநேயருக்கு, சிறப்பு அபி ?ஷகம் வடமாலை சாத்தி வழிபாடு நடந்தது. தொடர்ந்து, சீர்தட்டு புறப்பாடு, ஸ்ரீதேவி, பூதேவி, சமேத லட்சுமி நாராயண பெருமாள் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. பின், அன்னதானம் வழங்கப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு, வழிபாடு நடத்தினர். இதற்கான ஏற்பாடுகளை, பவுர்ணமி பூஜை குழுவைச்சேர்ந்த சந்துரு, பிரகாஷ், பாபு ஆகியோர் செய்தனர்.